< Back
மாநில செய்திகள்
கார் மோதி விவசாயி படுகாயம்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

கார் மோதி விவசாயி படுகாயம்

தினத்தந்தி
|
27 Aug 2023 6:45 PM GMT

மணல்மேடு அருகே கார் மோதி விவசாயி படுகாயம் அடைந்தார்.

மணல்மேடு:

மயிலாடுதுறை மாமரத்துமேடை நல்லமுத்தான் தெருவை சேர்ந்தவர் சித்திரைவேல் (வயது 42). விவசாயி. இவர் சம்பவத்தன்று மணல்மேடு அருகே உள்ள வில்லியநல்லூர் பகுதியில் விவசாய பணியை முடித்துவிட்டு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வில்லியநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்றபோது எதிரே வந்த ஒரு கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சித்திரைவேலுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார், காரை ஓட்டி வந்த தலைஞாயிறு தெற்கு தெருவை சேர்ந்த முருகன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்