< Back
மாநில செய்திகள்
காட்டெருமை தாக்கி விவசாயி படுகாயம்
நீலகிரி
மாநில செய்திகள்

காட்டெருமை தாக்கி விவசாயி படுகாயம்

தினத்தந்தி
|
18 Oct 2023 1:15 AM IST

ஊட்டி அருகே காட்டெருமை தாக்கி விவசாயி படுகாயம் அடைந்தார்.

ஊட்டி அருகே முதுகுளா கிராமத்தை சேர்ந்தவர் சிவா (வயது 30), விவசாயி. இவர் நேற்று தனது கேரட் தோட்டத்தில் விவசாய பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வழிதவறி தோட்டத்திற்குள் காட்டெருமை நுழைந்து அங்கு வேலை செய்து கொண்டிருந்த சிவாவை முட்டி தூக்கி வீசியது. இதில் அவர் 10 அடி உயரம் அந்தரத்தில் பறந்து கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்து தோட்டத்தில் இருந்தவர்கள் சத்தம் போட்டு காட்டெருமையை விரட்டினர். காட்டெருமை தாக்கியதில் சிவா படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்