ஈரோடு
கோபி அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
|கோபி அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
கடத்தூர்
கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம் பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 60). விவசாயி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரது மனைவி ஜனகரத்தினம் (57) உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார்.
அப்போது குடிபோதையில் இருந்த பொன்னுச்சாமி அவரிடம், "யாரை கேட்டு ஊருக்கு சென்றாய்"? என கேட்டுள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பொன்னுச்சாமி மனமுடைந்தார். உடனே அவரது தோட்டத்தில் புதிதாக கட்டி வரும் வீட்டின் அறைக்கு சென்று சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, பொன்னுச்சாமி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.