< Back
மாநில செய்திகள்
விவசாயி விபத்தில் பலி
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

விவசாயி விபத்தில் பலி

தினத்தந்தி
|
25 Aug 2023 12:15 AM IST

விசாரணைக்காக போலீசாரால் தேடப்பட்டு வந்த விவசாயி விபத்தில் பரிதாபமாக இறந்தார்.

சின்னசேலம்,

சின்னசேலம் அருகே தோட்டப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மணி (வயது 53). தொழிலாளி இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் தோட்டப்பாடி வடக்கு தெருவை சேர்ந்த விவசாயியான வடமலை (54) உள்பட 2 பேர் மணியை தாக்கி கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து வடமலையிடம் விசாரணை நடத்த அவரை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் வடமலை தனது மோட்டார் சைக்கிளில் நைனார்பாளையத்தில் இருந்து தோட்டப்பாடி நோக்கி புறப்பட்டு சென்றார். கிருஷ்ணாபுரம் பால் சொசைட்டி அருகில் சென்றபோது எதிர்பாராதவிதமாக முன்னாள் சென்ற டிராக்டர் மீது வடமலை மோதினார். இதில் பலத்த காயமடைந்த வடமலையை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வடமலை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் மியாடிட் மனோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்