< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி
|20 Dec 2022 12:30 AM IST
போடி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.
போடி அருகே உள்ள பெருமாள்கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் பெருமாள்தேவர் (வயது 72). விவசாயி. இவர் நேற்று காலை தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் அறை அருகே அறுந்து கிடந்த மின்சார வயரை தெரியாமல் பெருமாள்தேவர் மிதித்ததாக தெரிகிறது. இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.