< Back
மாநில செய்திகள்
மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

தினத்தந்தி
|
1 Nov 2022 12:17 AM IST

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தார்.

வேப்பந்தட்டை:

விவசாயி சாவு

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள மலையாளப்பட்டியை சேர்ந்தவர் பிரபு(வயது 42). விவசாயி. இவர் நேற்று தனது விவசாய கிணற்றில் உள்ள மின் மோட்டாரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது மின் மோட்டாருக்கு செல்லும் வயரை எடுத்தபோது எதிர்பாராதவிதமாக பிரபு மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரபுவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே அவரது உடலை பார்த்து அவரது உறவினர் கதறி அழுதது, அருகில் இருந்தவர்களை கண் கலங்க செய்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்