< Back
மாநில செய்திகள்
உத்தமபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி
தேனி
மாநில செய்திகள்

உத்தமபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

தினத்தந்தி
|
26 Oct 2023 3:00 AM IST

உத்தமபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலியானார்.

உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 44). விவசாயி. இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு அப்பகுதியில் உள்ளது. இந்தநிலையில் நேற்று மகேந்திரன் தனது தோப்புக்கு சென்றார். அப்போது அங்கு முள்வேலி அருகே மின்கம்பி அறுந்து கிடந்தது. இதனை கவனிக்காமல் மகேந்திரன் மின்கம்பியை மிதித்ததாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கிவீசப்பட்டார்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மகேந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்