< Back
மாநில செய்திகள்
கும்மிடிப்பூண்டி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி சாவு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி சாவு

தினத்தந்தி
|
6 May 2023 1:41 PM IST

கும்மிடிப்பூண்டி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஏனாதி மேல்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன சோழியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது43). விவசாயியான இவருக்கு திருமணமாகி வாணிஸ்ரீ (36) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

நேற்று காலை வீட்டில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வயல்வெளிக்கு சென்று வருவதாக மனைவி வாணிஸ்ரீயிடம் கூறிவிட்டு புருஷோத்தமன் சென்றார். ஆனால் பல மணி நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து அவரது மனைவி வாணிஸ்ரீ வயல்வெளிக்கு சென்று பார்த்தார். அப்போது பம்பு செட் உள்ள மோட்டார் அறையில் மின்சாரம் தாக்கி புருஷோத்தமன் உடல் கருகி பிணமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயி புருஷோத்தமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்