< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்
மின்சாரம் தாக்கி விவசாயி சாவு
|25 Aug 2022 10:07 PM IST
களம்பூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
ஆரணி
களம்பூர் அருகே சதுப்பேரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி (வயது 62), விவசாயி. இவருக்கு விஜயா என்ற மனைவியும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
மணி இன்று காலை தனது மாட்டை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். அப்போது அங்குள்ள நிலத்தின் அருகே அறுந்து கிடந்த மின்சார கம்பியை மாடு மிதித்து தவித்தது.
இதனை பார்த்த மணி மாட்டை காப்பாற்ற முயன்றார். அப்போது அவர் மீதும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் மாடும் இறந்தது.
இதையறிந்த கிராம மக்கள் உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் மின் நிறுத்தம் செய்து, அறுந்து கிடந்த மின்கம்பியை சீர் செய்தனர்.
இதுகுறித்து களம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.