< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
மின்சாரம் தாக்கி விவசாயி சாவு
|25 Oct 2023 12:45 AM IST
ஸ்ரீமுஷ்ணம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
ஸ்ரீமுஷ்ணம்,
ஸ்ரீமுஷ்ணம் அருகே நகரப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 73). விவசாயியான இவர் பாசன சங்க தலைவராகவும் இருந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை இவர் ஆயுத பூஜையையொட்டி தனது வயலில் உள்ள மின்சார மோட்டார் பம்புசெட்டுக்கு படைக்க சென்றார். பின்னர் அவர் அங்கிருந்த சுவிட்ஜை போட்ட போது மின்விளக்கு எரியவில்லை. இதனால் மின்சாரம் வருகிறதா? என்று மின் இணைப்பை சரி பார்த்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில், அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆயுத பூஜையை யொட்டி வயலுக்கு படைக்க சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.