< Back
மாநில செய்திகள்
மேல்மலையனூர் அருகேமின்சாரம் தாக்கி விவசாயி சாவு
விழுப்புரம்
மாநில செய்திகள்

மேல்மலையனூர் அருகேமின்சாரம் தாக்கி விவசாயி சாவு

தினத்தந்தி
|
30 Sept 2023 12:15 AM IST

மேல்மலையனூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்தாா்.


மேல்மலையனூர்,

மேல்மலையனூர் அருகே கீழ்செவளாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி மகன் ஆறுமுகம் (வயது 57). விவசாயி. இவர் நேற்று காலை வீட்டில் உள்ள மின்மோட்டாரை இயக்குவதற்காக மின்சார ஒயரை பிளக்கில் சொருகி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆறுமுகத்தின் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்த வளத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்