< Back
மாநில செய்திகள்
பன்றிக்காக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி விவசாயி பலி
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

பன்றிக்காக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி விவசாயி பலி

தினத்தந்தி
|
2 Nov 2022 1:55 PM IST

பன்றிக்காக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் நால்வர் கோவில் பேட்டையை பகுதியை சேர்ந்தவர் வேணு (வயது 66). விவசாயி. திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்தி மங்களம் கிராமம் இரும்புலி பகுதியில் உள்ள தனது சொந்த நிலத்தில் பயிர் செய்து வந்தார். அந்த பகுதியில் பன்றிகள் வந்து பயிர்களை நாசம் செய்வதால் அதனை தடுக்க வயல் பகுதியில் வேணு மின்வேலி அமைத்துள்ளார்.

இரவு பெய்த மழையில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கும் சூழ்நிலையில் இருந்து உள்ளதாகவும் வயலில் உள்ள நீரை அகற்ற அதிகாலையில் வயலுக்கு சென்றார்.

மின்வேலி அருகே நடந்து சென்றபோது எதிர்பாராத விதமாக மின்வேலியில் சிக்கி வேணு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த திருக்கழுக்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

மேலும் செய்திகள்