< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து விவசாயி சாவு
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து விவசாயி சாவு

தினத்தந்தி
|
17 Nov 2022 7:34 PM IST

ஆரணி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.

ஆரணி

ஆரணியை அடுத்த ஆதனூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் மணி (வயது 60), விவசாயி. இவருக்கு குமாரி என்ற மனைவியும், 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் மணி கார்த்திகை மாதத்தையொட்டி இன்று மோட்டார் சைக்கிளில் வேலூரை அடுத்த மாதனூர் கிராமத்தில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு சென்றார்.

பின்னர் அவர் மோட்டார் சைக்கிளில் ஆரணி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

ஆரணி - சேவூர் பைபாஸ் சாலையில் இருந்து ஆதனூர் செல்வதற்காக திரும்பும்போது அங்குள்ள வேகத்தடையில் ஏறி இறங்கியபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த மணியை உடனடியாக ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சையாக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து இறந்த மணியின் மகன் செல்வன் ஆரணி தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சிசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
மேலும் செய்திகள்