< Back
மாநில செய்திகள்
தனியார் கல்லூரி பஸ் மோதி விவசாயி சாவு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

தனியார் கல்லூரி பஸ் மோதி விவசாயி சாவு

தினத்தந்தி
|
21 July 2023 12:30 AM IST

தனியார் கல்லூரி பஸ் மோதி விவசாயி பலியானார்.

ஆலங்குடி அருகே பள்ளத்திவிடுதியை சேர்ந்தவர் அரங்கன் (வயது 70). விவசாயி. இவர் தனது மொபட்டில் ஆலங்குடி சந்தைக்கு சென்றுவிட்டு, மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கல்லாலங்குடி மாரியம்மன் கோவில் அருகே வந்த போது, அந்த வழியாக வந்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பஸ் மொபட் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த அரங்கனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அரங்கன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்