< Back
மாநில செய்திகள்
கும்மிடிப்பூண்டி அருகே கார் மோதி விவசாயி சாவு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே கார் மோதி விவசாயி சாவு

தினத்தந்தி
|
6 Feb 2023 6:04 PM IST

கும்மிடிப்பூண்டி அருகே கார் மோதி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

கார் மோதியது

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஓபசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்து சீனிவாசன் (வயது 72). விவசாயி. இவர், மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் எளாவூர் பஜாருக்கு பஸ்சில் வந்து இறங்கினார். எளாவூர் பஜாரில் உள்ள சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற அவர் மீது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் மோதியது.

சாவு

இதில் பலத்த காயம் அடைந்த முத்து சீனிவாசனை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்