< Back
மாநில செய்திகள்
மரத்தில் இருந்து தவறி விழுந்து விவசாயி சாவு
நாமக்கல்
மாநில செய்திகள்

மரத்தில் இருந்து தவறி விழுந்து விவசாயி சாவு

தினத்தந்தி
|
20 Feb 2023 12:15 AM IST

கொல்லிமலையில் மரத்தில் இருந்து தவறி விழுந்து விவசாயி இறந்தார்.

சேந்தமங்கலம்

கொல்லிமலை ஒன்றியம் தின்னனூர் நாடு ஊராட்சி மங்கலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50). விவசாயி. இவரது மனைவி சிந்தாமணி (45). இவர்களுக்கு பிரியா என்ற மகள் உள்ளார். இவர் நேற்று காலை அங்குள்ள சுமார் 30 அடி உயரம் கொண்ட ஒரு மரத்தில் மிளகு பறித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். அதில் பலத்த காயமடைந்த அவரை செம்மேடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து வாழவந்தி நாடு போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்