< Back
மாநில செய்திகள்
பேளுக்குறிச்சி அருகே  அளவுக்கு அதிகமாக மது குடித்த விவசாயி சாவு
நாமக்கல்
மாநில செய்திகள்

பேளுக்குறிச்சி அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த விவசாயி சாவு

தினத்தந்தி
|
1 Jun 2022 6:58 PM IST

பேளுக்குறிச்சி அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த விவசாயி சாவு

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலம் ஒன்றியம் பேளுக்குறிச்சி அருகே உள்ள கல்குறிச்சி வளையப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 69). விவசாயி. இவர் நேற்று முன்தினம் அங்குள்ள ஒரு விவசாய தோட்டத்தில் அளவுக்கு அதிகமாக மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அவருடைய மனைவி தமிழ்ச்செல்வி கணவரை மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த பன்னீர்செல்வம் நேற்று காலை இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பேளுக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்