< Back
மாநில செய்திகள்
வேப்பனப்பள்ளி அருகே  மோட்டார்சைக்கிள்கள் மோதல்; விவசாயி பலி
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

வேப்பனப்பள்ளி அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதல்; விவசாயி பலி

தினத்தந்தி
|
3 July 2022 6:37 PM IST

வேப்பனப்பள்ளி அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதல்; விவசாயி பலி

வேப்பனப்பள்ளி:

வேப்பனப்பள்ளி அருகே உள்ள எட்ரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராமன் (வயது 65). விவசாயி. இவர் நேற்று காலை தனது மோட்டார்சைக்கிளில் கொத்தகிருஷ்ணப்பள்ளி கிராமத்தில் இருந்து எட்ரப்பள்ளி நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் வேப்பனப்பள்ளி அருகே பண்ணப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சேஷன் (26) என்பவர் மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அந்த சமயம் எதிர்பாராதவிதமாக சேஷன் மோட்டார்சைக்கிள், முன்னால் சென்ற ராமன் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தடுமாறி கீழே விழுந்த நிலையில் ராமன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வேப்பனப்பள்ளி போலீசார் படுகாயம் அடைந்த சேஷனை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து போலீசார் உயிரிழந்த ராமனின் உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் இதுகுறித்து விபத்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்