< Back
மாநில செய்திகள்
புதுப்பேட்டை அருகேவிவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
கடலூர்
மாநில செய்திகள்

புதுப்பேட்டை அருகேவிவசாயி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
8 March 2023 1:30 AM IST

புதுப்பேட்டை அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுப்பேட்டை,

புதுப்பேட்டை அருகே உள்ள பலாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கன் மகன் பூசுந்தரம் (வயது 40), விவசாயி. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும், கவிதா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. 1½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. பூசுந்தரம் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பூசுந்தரம் உடல் நலக்குறைவு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணங்கள் ஏதும் உண்டா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்