< Back
மாநில செய்திகள்
செஞ்சி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
விழுப்புரம்
மாநில செய்திகள்

செஞ்சி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

தினத்தந்தி
|
3 Sept 2023 12:15 AM IST

செஞ்சி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டாா்.

செஞ்சி,

செஞ்சி அருகே உள்ள மாவட்டம் பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால்(வயது 57), விவசாயி. இவர் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். இதைபார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெயபால் பாிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயபால் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்