< Back
மாநில செய்திகள்
விவசாயி விஷம் குடித்து தற்கொலை
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

விவசாயி விஷம் குடித்து தற்கொலை

தினத்தந்தி
|
12 March 2023 10:35 PM IST

வந்தவாசியில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 60), விவசாயி. இவரது மனைவி வேண்டா. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

சம்பவத்தன்று ராமதாஸ் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராமதாஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வடவணக்கம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்