< Back
மாநில செய்திகள்
விவசாயி விஷம் குடித்து தற்கொலை
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

விவசாயி விஷம் குடித்து தற்கொலை

தினத்தந்தி
|
7 March 2023 6:18 PM IST

செய்யாறு அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா தேத்துறை கிராமம் காட்டுக்குடிசை பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 38), விவசாயி. இவர், வீட்டில் விஷம் குடித்து மயங்கி நிலையில் கிடந்தார்.

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் அனக்காவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்