< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
விவசாயி விஷம் குடித்து தற்கொலை
|9 Feb 2023 10:19 PM IST
அரக்கோணம் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே பெருங்களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 80). விவசாயி. இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தனார். இந்த நிலையில் மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கிருஷ்ணன் விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி விழுந்துள்ளார்.
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.