< Back
மாநில செய்திகள்
விஷம் குடித்து விவசாயி தற்கொலை
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

தினத்தந்தி
|
27 Oct 2022 9:42 PM IST

கலசபாக்கம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

கலசபாக்கம்

போளூர் அருகே பெரியகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (வயது 42), விவசாயி. இவருக்கும் கலசபாக்கம் அருகே கடலாடி கிராமத்தைச் சேர்ந்த கலைவாணி (35) என்பவருக்கும் திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் பழனிக்கும் கலைவாணிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் 10 நாட்களுக்கு முன்பு கலைவாணி கடலாடிக்கு வந்து விட்டார். இதனால் பழனி தீபாவளியன்று கடலாடி கிராமத்திற்கு சென்று மனைவியை குடும்பம் நடத்த வீட்டிற்கு அழைத்து உள்ளார்.

அவர் வராத காரணத்தால் மனம் உடைந்த பழனி வீட்டின் அருகிலேயே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு கடலாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று பழனி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கடலாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்