< Back
மாநில செய்திகள்
விஷம் குடித்து விவசாயி தற்கொலை
விருதுநகர்
மாநில செய்திகள்

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

தினத்தந்தி
|
23 Oct 2023 12:55 AM IST

விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி வெள்ளையாபுரம் தெருவை சேர்ந்தவர் குருசாமி (வயது 58). விவசாயியான இவர் கடந்த சில மாதங்களாக பக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்து (விஷம்) குடித்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் உயிருக்கு போராடிய குருசாமியை மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்