< Back
மாநில செய்திகள்
விவசாயி விஷம் குடித்து தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

விவசாயி விஷம் குடித்து தற்கொலை

தினத்தந்தி
|
9 July 2022 2:36 AM IST

விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தென்தாமரைகுளம்:

பொற்றையடி அருகே உள்ள இலங்காமணிபுரத்தை சேர்ந்தவர் சேவியர் (வயது 72), விவசாயி. இவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த அவர் நேற்று வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் தென்தாமரைகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சேவியரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்