திருச்சி
விவசாயி காரில் கடத்தல்
|விவசாயி காரில் கடத்தப்பட்டார்.
ஜீயபுரம்:
விவசாயி கடத்தல்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த திருப்பைஞ்சீலி அருகே உள்ள பழையூரை சேர்ந்தவர் சந்திரன்(வயது 54). விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்தை திருச்சி பனையபுரத்தை சேர்ந்த கர்ணன் என்பவர் குறைந்த விலைக்கு தனக்கு பவர் எழுதித் தரும்படி கூறி பிரச்சினை செய்ததாகவும், இது தொடர்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று சந்திரன், ஜீயபுரம் கடை வீதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது கர்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 5 பேர் சேர்ந்து சந்திரனை காரில் ஏற்றி, கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
6 பேர் மீது வழக்கு
இது குறித்து சந்திரனின் மனைவி புவனேஸ்வரி, ஜீயபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் கர்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 5 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, அவர்களை தேடி வருகிறார்.