< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவசாயி கைது
|25 Jun 2023 11:25 PM IST
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவசாயி கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, இரூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மாசிதுரை. இவரது மகன் மதுபாலன் (வயது 28). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு 6 வயது சிறுமியை தூக்கிச்சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை கண்டவர்கள் அச்சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பின்னர் சிறுமியை சிகிச்சைக்காக பெற்றோர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சிறுமியின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து மதுபாலனை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மதுபாலன் மீது ஏற்கனவே ஒரு போக்சோ வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.