< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
பெண்ணை தாக்கிய விவசாயி கைது
|15 Feb 2023 12:15 AM IST
போடி அருகே பெண்ணை தாக்கிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
போடி அருகே உள்ள முந்தல் காலனியை சேர்ந்தவர் ஜெயா (வயது 62). அதே பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (50). விவசாயி. இவர்கள் இருவருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்து வந்தது. நேற்று முன்தினம் மாலை ஜெயா தனது இடத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கருப்பையா, முந்தல் பகுதியை சேர்ந்த விஜயன் (29) ஆகியோர் ஜெயாவை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து ஜெயா குரங்கணி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பையாவை கைது செய்தனர்.