< Back
மாநில செய்திகள்
வீட்டில் மது விற்ற விவசாயி கைது
நாமக்கல்
மாநில செய்திகள்

வீட்டில் மது விற்ற விவசாயி கைது

தினத்தந்தி
|
27 Dec 2022 12:13 AM IST

நாமகிரிப்பேட்டையில் வீட்டில் மது விற்ற விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

நாமகிரிப்பேட்டை

நாமகிரிப்பேட்டையில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக ஆயில்பட்டி போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையில் போலீசார் அந்த பகுதிகளில் சோதனை செய்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த விவசாயி ராஜூ கண்ணன் (வயது30) என்பவர், பல்வேறு டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்