< Back
மாநில செய்திகள்
விவசாயிகளுக்கு பண்ணைப்பள்ளி பயிற்சி
சிவகங்கை
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு பண்ணைப்பள்ளி பயிற்சி

தினத்தந்தி
|
11 Oct 2023 6:45 PM GMT

தேவகோட்டையில் விவசாயிகளுக்கு பண்ணைப்பள்ளி பயிற்சி அளிக்கபட்டது

தேவகோட்டை வட்டார வேளாண்மைத்துறையின் கீழ் செயல்படும் அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் பண்ணைப்பள்ளி பயிற்சி நெல் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை என்ற தலைப்பில் வசந்தணி கிராமத்தில் நடத்தப்பட்டது. தேவகோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் காளிமுத்து தலைமை தாங்கினார். தேவகோட்டை வேளாண்மை விரிவாக்க மையத்தில் செயல்படும் திட்டங்கள் பற்றியும், வழங்கப்படும் இடுபொருட்கள் பற்றியும், தமிழ் மண்வள இணையதளம் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். சிறப்பு பயிற்சியாளராக குன்றக்குடி வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர் விமலேந்திரன் நெல் பயிர் பயிரிடும் பொழுது தேர்வு செய்யப்பட வேண்டிய சான்று விதைகள், ரகங்கள், மண் மாதிரி சேகரித்தல், விதை நேர்த்தி செய்தல், நெல் நுண்ணூட்டம் பயன்பாடுகள் மற்றும் அதன் நன்மைகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சியளித்தார்.

வேளாண்மை உதவி அலுவலர் விஜய் உள்ளிட்டோர் பேசினர். ஏற்பாட்டினை வட்டார தொழில் நுட்ப மேலாளர் பிரசாந்த் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலளார்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்