< Back
மாநில செய்திகள்
திருத்தணி முருகன் கோவில் மண்டபத்தில் மின்விசிறி கழன்று விழுந்து பெண் காயம்
சென்னை
மாநில செய்திகள்

திருத்தணி முருகன் கோவில் மண்டபத்தில் மின்விசிறி கழன்று விழுந்து பெண் காயம்

தினத்தந்தி
|
5 Aug 2022 9:25 AM IST

திருத்தணி முருகன் கோவில் மண்டபத்தில் மின்விசிறி கழன்று விழுந்ததில் பெண் காயமடைந்தார்.

ஆவடி அடுத்த கன்னடபாளையம் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். இவருடைய மனைவி லட்சுமி (வயது 40). இவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் திருத்தணி முருகன் கோவிலில் உள்ள மண்டபத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு காதுகுத்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது திடீரென மண்டபத்தில் சுழன்று கொண்டிருந்த மின்விசிறி கழன்று லட்சுமியின் தலை மீது விழுந்தது. இதில் காயம் அடைந்த லட்சுமி, மயக்கம் அடைந்தார். அவருக்கு மலைகோவில் வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்