< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
குடும்பத்தகராறு: இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
|19 April 2023 2:14 PM IST
குடும்பத்தகராறு காரணமாக இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்தவர் கோனேஸ்வரன் (வயது 37). இவருக்கு திருமணமாகி வான்மதி (28) என்ற மனைவியும் வர்சன் (9) என்ற மகனும், பிரியாங்கா (6) என்ற மகளும் உள்ளனர். கோனேஸ்வரனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்ந 16-ந்தேதி இரவு கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறில் கோனேஸ்வரன் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்ததாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயம் அடைந்த கோனேஸ்வரன் கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.