குடும்பத்தகராறு: 3 குழந்தைகளை ஆற்றில் வீசி தாய் தற்கொலை முயற்சி...!
|திருவண்ணாமலை அருகே குடும்பத்தகராறில் 3 குழந்தைகளையும் ஆற்றில் வீசி கொலை செய்துவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் சதாகுப்பம் பகுதியை சேர்ந்தவர் பரசுராமன். இவரது மனைவி அமுதா. இந்த தம்பதிகளுக்கு இளவரசன், குறளரசன் என்ற ஆண் குழந்தையும் யாஷினி என்ற பெண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி அமுதா தனது 3 குழந்தைகளையும் தென்பெண்ணை ஆற்றில் வீசி கொலை செய்து, தானும் தற்கொலைக்கு முயன்று உள்ளார். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் விரைந்து வந்து தற்கொலைக்கு முயன்ற அமுதாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோன்று தெண்பெண்ணை ஆற்றில் வீசப்பட்ட 3 குழந்தைகளையும் உயிரிழந்த நிலையில் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், இதுகுறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாய் அமுதாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.