< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
இருளர் இன மக்களுக்கு குடும்ப அட்டை
|7 July 2022 11:20 PM IST
அரக்கோணம் அருகே இருளர் இன மக்களுக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டது.
அரக்கோணத்தை அடுத்த கைனூர் இருளர் பகுதியில் குடியிருக்கும் சிலர் குடும்ப அட்டை இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தனர். இதனையறிந்த தனியார் தொண்டு அமைப்பு அந்த பகுதியில் குடும்ப அட்டை இல்லாத 17 குடும்பத்தினர்க்கு இணைய வழியாக விண்ணப்பித்தனர். அதன்படி அவர்களின் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு 17 குடும்பங்களுக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டது. அரக்கோணம் வட்ட வழங்கல் அலுவலர் பரமேஸ்வரி குடும்ப அட்டை வழங்கினார். அப்போது தனியார் தொண்டு அமைப்பு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.