கள்ளக்குறிச்சி
கள்ளக் குறிச்சி திருக்கோவிலூர் தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி
|கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் தாலுகா அலுவலங்களில் நடைபெற்ற ஜமாபந்தியில் பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனுகொடுத்தனர்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் அசோகன் தலைமையில் ஜமாபந்தி தொடங்கியது. தாசில்தார் விஜய்பிரபாகரன், குடிமைப்பொருள் தனிதாசில்தார் வெங்கடேசன், சமூகபாதிகாப்பு தனிதாசில்தார் மணிகண்டன், கலால் தனிதாசில்தார் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பொதுமக்களிடம் இருந்து பட்டா மாற்றம், பட்டா கோருதல் உள்பட பல்வேறு கோரிக்கைள் தொடர்பாக 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. நில எடுப்பு தனிதாசில்தார் கமலம், அலுவலக மேலாளர்(குற்றவியல்) சிவசங்கரன், மண்டல துணை தாசில்தார் அந்தோணிராஜ், தலைமையிடத்து துணை தாசில்தார் பானுப்பிரியா, வட்டசார் ஆய்வாளர் வெற்றிவேல், குறுவட்ட நில அளவர், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருக்கோவிலூர்
அதேபோல் திருக்கோவிலூர் தாலுக்கா அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(நிலம்) ராஜவேல் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. இதில் பொது மக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை கொடுத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் திருக்கோவிலூர் தாசில்தார் குமரன், மண்டல துணை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, ஜமாபந்தி மேனேஜர் பாலசுப்பிரமணியம, வருவாய் ஆய்வாளர் சிட்டிபாபு மற்றும் நில அளவைத் துறையினர், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.