< Back
மாநில செய்திகள்
தவறி விழுந்த பெண் பலி
திண்டுக்கல்
மாநில செய்திகள்

தவறி விழுந்த பெண் பலி

தினத்தந்தி
|
15 April 2023 8:02 PM IST

வடமதுரை அருகே, மொபட்டில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

வடமதுரை அருகே உள்ள கம்பிளியம்பட்டி எர்ரன் செட்டியூரை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 65). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி துளசியம்மாள் (58). நேற்று முன்தினம் இவர்கள் 2 பேரும், காணப்பாடி நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். மொபட்டை கதிர்வேல் ஓட்டினார். துளசியம்மாள் பின்னால் அமர்ந்திருந்தார். சிங்காரக்கோட்டை-காணப்பாடி சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மொபட் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென மொபட்டில் இருந்து துளசியம்மாள் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் உயிருக்கு போராடினார்.

அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தனது மனைவியை மீட்ட கதிர்வேல், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக துளசியம்மாளை சேர்த்தார். பின்னா் மேல்சிகிச்சைக்காக, மதுரை அரசு மருத்துவமனைக்கு துளசியம்மாள் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்