< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலி
|26 May 2022 9:33 PM IST
சின்னாளப்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலியானார்.
சின்னாளப்பட்டி அருகே உள்ள செட்டியபட்டி ஊராட்சி வளையப்பட்டியை சேர்ந்தவர் ராமாக்காள் (வயது 87). நேற்று பிற்பகல் 3 மணி அளவில் இவர், வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவருடைய உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இருப்பினும் ராமாக்காள் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் தனது தோட்டத்து வீட்டின் அருகே உள்ள 80 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் ராமாக்காள் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கிணற்றில் இருந்து ராமாக்காள் உடலை மீட்டனர்.
இதுகுறித்து அம்பாத்துரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கிணற்றில் தவறி விழுந்து ராமாக்காள் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.