< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ரெயில் பாதையில் விழுந்த மரங்கள்; ஊட்டி-குன்னூர் இடையே ரெயில் சேவை ரத்து
|6 Aug 2022 4:06 PM IST
ரெயில் பாதையில் ராட்சத மரம் சரிந்து விழுந்ததால், ஊட்டி-குன்னூர் இடையே மலை ரெயில் ரத்து செய்யப்பட்டது.
நீலகிரி,
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வரும் நிலையில், அங்கு பல்வேறு இடங்களில் பலத்த காற்று காரணமாக மரங்கள் சரிந்து விழுந்துள்ளன. இதனிடையே ஊட்டியின் லவ்டேல் ரெயில் நிலையம் அருகே ராட்சத மரம் ஒன்று தண்டவாளத்தில் விழுந்தது. இதன் காரணமாக ஊட்டி-குன்னூர் இடையே மலை ரெயில் ரத்து செய்யப்பட்டது.
அதே போல் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி சென்ற மலை ரெயில், குன்னூரில் 2 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த ரெயில் கேத்தி பகுதி வரை மட்டுமே இயக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.