< Back
மாநில செய்திகள்
மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சி
கரூர்
மாநில செய்திகள்

மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சி

தினத்தந்தி
|
2 July 2023 11:40 PM IST

மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. விளைந்தவுடன் வியாபாரிகள் வாங்கி சென்று புதன்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். அங்கு மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளிகிழங்கு டன் ஒன்றுக்கு ரூ.12 ஆயிரத்து 500-க்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்று ரூ.11 ஆயிரத்து 500-க்கு விற்பனையாகிறது. சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கடந்த வாரம் டன் ஒன்று ரூ.13 ஆயிரத்து 500-க்கு விற்பனையானது. தற்போது ரூ.12 ஆயிரத்து 500-க்கு விற்பனையாகிறது.

மேலும் செய்திகள்