< Back
மாநில செய்திகள்
அதிகாரிகளிடம் பணம் கேட்டு மிரட்டிய போலி நிருபர் கைது
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

அதிகாரிகளிடம் பணம் கேட்டு மிரட்டிய போலி நிருபர் கைது

தினத்தந்தி
|
17 Oct 2023 12:15 AM IST

கள்ளக்குறிச்சியில் அதிகாரிகளிடம் பணம் கேட்டு மிரட்டிய போலி நிருபரை போலீசார் கைது செய்தனர்.

மிரட்டல்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் திட்ட அலுவலராக கதிர் சங்கர் பணிபுரிந்து வருகிறார். இவரிடம், அளம்பலம் கிராமத்தை சேர்ந்த வானழகன்(வயது 28) என்பவர் நீங்கள் பணம் வாங்கிக்கொண்டு சமையலரை பணி மாறுதல் செய்துள்ளீர்கள். நான் நிருபர் எனக்கு பணம் தர வேண்டும் இல்லையென்றால் பத்திரிகை மற்றும் டி.வி.யில் செய்தி போட்டு விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கதிர்சங்கர் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து வானழகனை கைது செய்தனர்.

மற்றொரு புகார்

இதேபோல் மாவட்ட செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் சரவணனிடம் வானழகன், அளம்பலம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன், மோ.வன்னஞ்சூரை சேர்ந்த குமரவேல் ஆகிய 3 பேரும் பணம் கேட்டு மிரட்டினர்.

இது குறித்து சரவணன் விசாரித்ததில் இவர்கள் 3 பேரும் போலி நிருபர்கள் என தெரிகிறது. எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என செய்தி-மக்கள் தொடர்பு அதிகாரி சரவணன் கொடுத்த புகாரின் பேரில் வானழகன், வெங்கடேசன், குமரவேல் ஆகிய 3 பேர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்