திருவள்ளூர்
இன்ஸ்டாகிராமில் போலி ஐ.டி. உருவாக்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெயரில் பணமோசடி - போலீசார் அதிர்ச்சி
|இன்ஸ்டாகிராமில் போலி ஐ.டி. மூலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெயரில் பண மோசடி செய்யப்பட்ட சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக சிபாஸ் கல்யாண் இருந்து வருகிறார். அவரின் புகைப்படத்துடன் 'திருவள்ளூர் ஐ.பி.எஸ். பேன்ஸ் பேஜ்' என்ற பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு உருவாக்கி அதன் மூலம் பலரிடம் பணம் கேட்டு மோசடி நடந்து வருவதாக அவருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண் தனது புகைப்படம் வைத்து பணம் கேட்டு மோசடியில் ஈடுபடும் நபர்களை யாரும் நம்ப வேண்டாம் எனவும், எச்சரிக்கையாக அத்தகைய நபர்களிடம் இருக்குமாறும் தனது திருவள்ளூர் மாவட்ட காவல்துறை டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
பிரபலமான நபர்களின் உருவப்படங்கள் வைத்து பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற கணக்கு மூலம் மோசடிகள் அரங்கேறி வருவது தொடர்ச்சியாக நடந்து வரும் நிலையில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெயரில் அவரது புகைப்படம் வைத்து போலியான இன்ஸ்டாகிராம் ஐ.டி.யை உருவாக்கி பணம் மோசடி நடத்தப்பட்டுள்ள சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.