< Back
மாநில செய்திகள்
குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.4 லட்சம் போலி துணி பவுடர் பறிமுதல் - வடமாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் கைது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.4 லட்சம் போலி துணி பவுடர் பறிமுதல் - வடமாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் கைது

தினத்தந்தி
|
1 April 2023 1:40 PM IST

கும்மிடிப்பூண்டி அருகே குடோனில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பிரபல துணிபவுடர் பெயரிலான ரூ.4 லட்சம் மதிப்புள்ள 5 டன் எடை கொண்ட போலி துணி பவுடரை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அரியானாவை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தனியார் திருமண மண்டபம் அருகே உள்ள தனியார் குடோனில் போலீசார் ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பிரபல நிறுவன துணி பவுடர் பெயரில் 300 மூட்டைகளில் 5 டன் எடை கொண்ட போலியான துணி பவுடர் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.4 லட்சம் ஆகும்.

இவை கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்யப்படுவதற்காக குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி துணி பவுடரை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த அரியானாவைச் சேர்ந்த வாலிபர்களான சுமித்(வயது26), அஜய் (19) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலி துணி பவுடர் மூட்டைகளையும், அரியானா பதிவெண் கொண்ட ஒரு ஜீப்பையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்