< Back
மாநில செய்திகள்
தஞ்சை மாவட்டத்தில் நியாய விலைக்கடை பணியாளர்கள் 3 நாள் வேலை நிறுத்தம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

தஞ்சை மாவட்டத்தில் நியாய விலைக்கடை பணியாளர்கள் 3 நாள் வேலை நிறுத்தம்

தினத்தந்தி
|
14 Jun 2023 3:14 AM IST

பொது வினியோக திட்டத்திற்கென தனித்துறை ஏற்படுத்தக்கோரி தஞ்சை மாவட்டத்தில் நியாய விலைக்கடை பணியாளர்கள் 3 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதுடன் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டத்திலும் ஈடுபட உள்ளனர்.

பொது வினியோக திட்டத்திற்கென தனித்துறை ஏற்படுத்தக்கோரி தஞ்சை மாவட்டத்தில் நியாய விலைக்கடை பணியாளர்கள் 3 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதுடன் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டத்திலும் ஈடுபட உள்ளனர்.

நியாய விலைக்கடை பணியாளர்கள்

தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் எம்.ராமலிங்கம், தஞ்சை மாவட்ட தலைவர் அறிவழகன், செயலாளர் கரிகாலன், பொருளாளர் ராமலிங்கம் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொது வினியோக திட்டத்திற்கென தனித்துறை ஏற்படுத்த வேண்டும். இரட்டை பில்முறையை ரத்து செய்ய வேண்டும். சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும். புதிய 4 ஜி விற்பனை முனையம் வழங்க வேண்டும்.

3 நாள் வேலை நிறுத்தம்

மாதந்தோறும் ஊதியத்திற்கு என்று தனி கணக்கு தொடங்கி நிதி ஒதுக்கி அதன் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் ஆலோசனையின்படி வருகிற 3 நாள் போராட்டம் நடைபெறுகிறது.

அதன்படி இன்று (புதன்கிழமை) வேலை நிறுத்தம் செய்து தஞ்சை மாவட்ட தலைநகரில் காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். நாளை (வியாழக்கிழமை) வேலை நிறுத்தம் செய்து கோட்ட அளவில் ஆர்ப்பாட்டமும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வேலை நிறுத்தம் செய்து கருப்பு சட்டை அணிந்து பெண் பணியாளர்கள் கருப்பு புடவை அணிந்து மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். இதில் ஊழியர்கள் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்