< Back
மாநில செய்திகள்
சாலையில் நடந்து சென்றவர் மயங்கி விழுந்து சாவு
நாமக்கல்
மாநில செய்திகள்

சாலையில் நடந்து சென்றவர் மயங்கி விழுந்து சாவு

தினத்தந்தி
|
19 Sept 2022 12:36 AM IST

பள்ளிபாளையத்தில் சாலையில் நடந்து சென்றவர் மயங்கி விழுந்து இறந்தார்.

பள்ளிபாளையம்

குமாரபாளையம்-எடப்பாடி சாலை பாறையூர் பஸ் நிறுத்த பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று முன்தினம் மாலை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவர் மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தனர். இந்தநிலையில் ஆம்புலன்ஸ் 3 மணி நேரம் கழித்து வந்ததாக கூறப்படுகிறது. அதற்குள் அவர் இறந்து விட்டார் என்றும், விரைவாக 108 ஆம்புலன்ஸ் வாகனம் வந்திருந்தால் அவரது உயிரை காப்பாற்றி இருக்கலாம் எனவும் அந்தபகுதி பொதுமக்கள் கூறினார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணையில் இறந்தவர் தேவூரை சேர்ந்த கந்தசாமி (வயது 47) கூலித்தொழிலாளி என்பது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்