< Back
மாநில செய்திகள்
பிளஸ்-2 தேர்வில் தோல்வி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
சென்னை
மாநில செய்திகள்

பிளஸ்-2 தேர்வில் தோல்வி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
7 July 2022 11:03 AM IST

திருவேற்காட்டில் பிளஸ்-2 தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவேற்காடு, வி.ஜி.எஸ். நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத். இவருடைய மகன் திவாகர் (வயது 18). இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவில் தமிழ், கணிதம் ஆகிய 2 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை.

இதனால் திவாகர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். அவருக்கு பெற்றோர் ஆறுதல் கூறி சமாதானம் செய்து வந்தனர். நேற்று முன்தினம் பெற்றோர் வெளியே சென்றுவிட்டதால் திவாகர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் இருந்த திவாகர், படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்