< Back
மாநில செய்திகள்
கும்மிடிப்பூண்டியில் தொழிற்சாலை ஊழியரை கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கும்மிடிப்பூண்டியில் தொழிற்சாலை ஊழியரை கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு

தினத்தந்தி
|
20 May 2022 12:30 PM IST

கும்மிடிப்பூண்டியில் தொழிற்சாலை ஊழியரை கத்தியால் குத்தி செல்போன் பறித்த மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியை சேர்ந்த புஷ்பராஜ் (வயது28). இவரது நண்பர் விருதாச்சலத்தை சேர்ந்த திவாகர் (28). இவர்கள் இருவரும் கும்மிடிப்பூண்டி பஜாரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர். மேலும் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலை ஒன்றில் ஊழியர்களாக வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு கும்மிடிப்பூண்டி பஜாரையொட்டி உள்ள தாமரை ஏரி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் கத்திமுனையில் மேற்கண்ட இருவரிடமும் பணம் கேட்டு மிரட்டி திவாகாரனின் வலது கையில் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் உடன் சென்ற புஷ்பராஜின் செல்போனை அந்த மர்மநபர் கத்தி முனையில் பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்

மேலும் செய்திகள்