< Back
மாநில செய்திகள்
இருதரப்பினர் இடையே கோஷ்டி மோதல்; 4 பேருக்கு கத்திக்குத்து
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

இருதரப்பினர் இடையே கோஷ்டி மோதல்; 4 பேருக்கு கத்திக்குத்து

தினத்தந்தி
|
21 May 2022 1:02 AM IST

பொன்னமராவதி அருகே இருதரப்பினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் 4 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.

பொன்னமராவதி,

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாண்டிமணி (வயது 24). இவர் அப்பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்தநிலையில் அந்த பெண்ணை நெற்குப்பையைச் சேர்ந்த பாலமுருகனுக்கு அவரது பெற்றோர் திருமணம் பேசி முடித்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பாலமுருகன் மற்றும் அந்த பெண்ணின் அண்ணன் பிரவீன் குமார் ஆகியோர் நேற்று இரவு 7 மணியளவில் வேந்தன் பட்டியில் உள்ள ஸ்டூடியோவுக்கு சென்றனர். அப்போது அங்கு வந்த பாண்டிமணி, அவரது அண்ணன் வேல்முருகன், நண்பர்கள் பாண்டியராஜன், மருதுபாண்டியன் ஆகியோர் பாலமுருகனிடம் தகராறில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த பாலமுருகன், பிரவீன் குமார் ஆகியோர் பாண்டிமணி, வேல்முருகன், பாண்டியராஜன், மருதுபாண்டியனை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில், படுகாயம் அடைந்த அவர்கள் வளையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்