மெட்ரோ ரெயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள் - சென்னை ஐகோர்ட்டில் மெட்ரோ நிர்வாகம் தகவல்
|மெட்ரோ ரெயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள் ஏற்படுத்தபடும் என்று சென்னை ஐகோர்ட்டில் மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னையில் கட்டப்பட்டுள்ள 32 மெட்ரோ ரெயில் நிலையங்களும், புதிதாக கட்டப்பட்டு வரும் நிலையங்களும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் கட்டப்படவில்லை என சென்னையை சேர்ந்த வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் மாநில ஆணையரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அந்த மனுவில் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், இந்த மனு தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மெட்ரோ நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மெட்ரோ ரெயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் இன்னும் 6 வார காலத்திற்குள் ஏற்படுத்தப்படும்.
புதிதாக கட்டப்படும் மெட்ரோ ரெயில் நிலையங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளுடன் கட்டப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து, வழக்கு விசாரணையை 6 வாரத்திற்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.