< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
காரைக்கால் கலெக்டர் அலுவலகத்தின் பேஸ்புக் பக்கம் முடக்கம் - சைபர் கிரைம் போலீசார் விசாரணை
|2 Jan 2024 9:57 PM IST
கலெக்டர் அலுவலகத்திற்கான புதிய பேஸ்புக் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
காரைக்கால்,
காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் பேஸ்புக் பக்கம் மர்ம நபர்களால் முடக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேஸ்புக் பக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்ட நிலையில், தற்போது கலெக்டர் அலுவலகத்திற்கான புதிய பேஸ்புக் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
அதே சமயம், கலெக்டர் அலுவலகத்தின் பேஸ்புக் பக்கத்தை முடக்கிய நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன், காரைக்கால் பத்திரப்பதிவுத்துறை கைரேகை மென்பொருள் ஹேக் செய்யப்பட்டு பொதுமக்களின் பணம் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.